Wednesday, May 25, 2011

அழகர்சாமியின் குதிரை - வித்தியாசமான விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை.. ஒரு கவிதை.. பாஸ்கர் சக்தியின் கதை சுசீந்திரன் இயக்கத்தில் அருமையாக வந்துள்ளது. சமீபத்தில் வந்திருக்கும் படங்களில் மிக அருமையானது அ.குதிரை. எண்பதுகளின் பின்னணியில் ஒரு மெல்லிய கிராம கதை. அழகர்சாமியின் மலைக் கிராமமும் பின்னணியில் மலைகளும் கண்களுக்கு இதமோ இதம். அழகர்சாமியின் குதிரையின் வெற்றி இன்னும் பல எழுத்தாளர்களைத் திரைப்படத்துறைக்குக் கொண்டுவரும் என்று நம்பிக்கை தருகிறது . அழகர்சாமியின் குதிரை மூலக்கதையிலிருந்து அங்கங்கே விலகியிருந்தாலும் அது துருத்திக் கொண்டிருக்காமல் இயல்பாய் இருப்பது படத்திற்கான அழகு. பாஸ்கர் சக்தி இத்திரைப்படத்தின் இணை இயக்குனராகவும் இருப்பது படத்தின் மற்றொரு பலம் போல் தெரிகிறது. சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம்

பச்சை பசேல் பின்னணியில், கம்பீரமாக நிற்கின்ற வெள்ளை வெளேர் குதிரை , காக்கி சட்டையில் பரட்டை தலையுடன் ஒருவர்.. இருவருக்கும் மேலே வெள்ளை எழுத்தில் படத்தின் தலைப்பான "அழகர்சாமியின் குதிரை" அழகிய வடிவத்தில் மின்னுகிறது.. அதிலும் குதிரை என்ற வார்த்தை பார்க்கும் போதே ஒரு குதிரையை போலுள்ளது.. எழுத்துக்கள் இன்னும் ஒரு 45 டிகிரி சாய்மானத்தில் இருந்திருந்தால் மிக மிக அருமையாக இருந்திருக்கும்

அதே பச்சை பசேல் கிராம பின்னணியில் பரட்டை சுருள் முடியுடன் , வெள்ளை வேட்டி சட்டையில் , அழகான ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில்.. அருகில் குதிரையும் மாலையுடன்.. இவர்களுக்கு மேலே படத்தின் தலைப்பு.. இங்கே குதிரையை விட அந்த பெண்ணும் , பரட்டை தலையில் இருப்பவரும் தான் ஈர்ப்பு . குதிரைக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் இருந்திருக்கலாம்

என்னங்க ஒன்னும் புரியலையா? முதல் பத்தியானது (சிவப்பு நிறம் ) படம் பற்றி மற்ற தளங்களில் வந்த விமர்சனத்தின் தொகுப்பு.. !

இரண்டு மற்றும் மூன்றாம் பத்திகள் (பச்சை) இந்த படத்தினுடைய இரண்டு போஸ்டர்கள் பற்றிய விமர்சனம் ..

பின்ன படமே இன்னும் பார்க்காத, வெறும் ரெண்டு போஸ்டர் மட்டுமே பார்த்த ஒருத்தன் விமர்சனம் பண்ணா இப்படிதானே இருக்கும்.. ! ஆமாங்க இன்னும் படம் பார்க்கவே இல்லை. இதோ கிளம்பிகிட்டே இருக்கேன்.. 4 மணி காட்சிக்கு சத்யம்
காம்ப்ளெக்ஸ்ல.. குடும்பத்தோட.. ! ஆபிஸ்க்கு லீவ் போட்டு போறேன்..

பார்த்துட்டு வந்து வேறு வகைல வித்தியாசமா விமர்சனம் எழுதறேன்.. சரியா??.. வர்டா .. !

ம்ம்ம் மறந்துட்டேன்.. WWW.GOOGLE.COM ல search விண்டோல "அழகர்சாமி குதிரை - விமர்சனம்' நு கொடுத்து தேடு பட்டனை சொடுக்கினா.. நிறைய பக்கங்கள் வருதுங்க.. நான் பார்த்துட்டு வந்து எழுதற வரைக்கும் அதை எல்லாம் படிசிகிட்டு இருங்க .. ஓகே வா..
அவ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ் ! ")

அன்புடன்
வேலவன்

7 comments:

Sudhakar said...

குசும்புக்கு அவளவு இல்லாம போயிட்டு இருக்கு தம்பி

hemamalini said...

எப்படி இப்படீல்லாம் யோசிக்கறீங்க?

Kumar said...

enna koduma sir idhu..

Unknown said...

இப்படி ஒரு நல்ல படம் பாக்க குடும்பத்தோட போறதுக்கு நன்றி ...

நல்ல படம் என்று பார்காமலே தான் நானும் சொல்றேன்

வேலவன் said...

வருகைக்கு நன்றி ரியாஸ் .. பார்த்துட்டேன்.. உண்மையிலேயே நல்ல படம் தான்.. ! குடும்பத்தோடு பார்க்கலாம்

farahath razeem said...

நல்ல தான்யா யோசிக்கறாங்க

வேலவன் said...

thanks! Farahath !

Post a Comment