Tuesday, May 17, 2011

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க



அம்மா அரசுக்கு எதிரா முதல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.. பொதுநல வழக்கு போடுவதற்கென்றே சிலர் இருக்கின்றார்கள். அதில் முதன்மையானவர் திரு டிராபிக் ராமசாமி. பொதுமக்களை பாதிக்கும் எந்த பிரச்சனையானாலும் தைரியமாக நீதிமன்ற படியேறிவிடுவார் . பலமுறை சிக்கல்களில் சிக்கி கொண்டாலும், பொதுநல வழக்கு தொடருவதில் இருந்து மட்டும் அவர் பின்வாங்கவில்லை. இந்த முறை திருவாரூரில் சுயேட்சையாக போட்டியிட்டார்.. எவ்வளவு வாக்குகள் வாங்கினார் என்று தெரியவில்லை..

இப்போது அம்மா (அதிமுக) அரசுக்கு எதிராக முதல் பொது நல வழக்கு பதியப்பட்டுள்ளது.. இந்த முறை திரு டிராபிக் ராமசாமி அல்ல... வழக்கை பதிந்திருப்பவர் வக்கீல் திரு ஜி.கிருஷ்ணமூர்த்தி .

சட்டசபையை புதிய வளாகத்திலிருந்து (ஓமந்தூரார் தோட்டம் ) பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் அம்மாவின் செயலுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்ற கதவை தட்டியுள்ளார்..

இடவசதி குறைவு என்று காரணம் காட்டி கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவே, வேறு இடங்களில் தலைமை செயலகம் / சட்டசபை கட்ட முடிவுசெய்தார். பின்பு வந்த அரசாங்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் பல ஆயிரம் செலவில் அனைத்து வசதிகளுடன் புதிய சட்டசபை கட்டியுள்ளது.. ஆனால் ஜெயலலிதா மீண்டும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடத்த ஏற்பாடுகள் செய்வது சரியல்ல.. மேலும் செம்மொழி நூலகத்தை இடமாற்றம் செய்வதால் பல புத்தகங்கள் பாழாகிறது.. புதிய கட்டிடத்தை என்ன செய்ய போகின்றார்கள் என்றும் தெளிவில்லை. இது சட்ட விரோத, அங்கீகாரமற்ற , பொது நலனுக்கு எதிரான செயல்.

தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. அதை இடமாற்றம் செய்வதுபற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு யார் அதிகாரம் அளித்தது? என்பதை தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் விளக்க வேண்டும்.

விதி 110 ன் கீழ் சட்டசபை மாற்றம் வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஜெயலலிதா தகுந்த காரணங்கள் சொல்லிவிட்டு , மீண்டும் சட்டசபை மாற்றம் செய்ய வேண்டும். அதுவரை சட்டசபை மாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்..

பார்க்கலாம் நீதிமன்றம் என்ன சொல்கிறதென்று.. அம்மா அரசின் மீதான முதல் வழக்கில் சாதகமான முடிவா, பாதகமான முடிவா என்று..

அன்புடன்
வேலவன்

4 comments:

Sathish Kumar RK said...

oru pappum vegadhu enga amma kitta.. !

ராஜேஷ், திருச்சி said...

இந்த ஜோசியக்காரன் இங்கயும் வந்து ஜெயாக்கு அடிவருடி விடுறானா? என்ன பொழப்புடா இது .. தூ

வேலவன் said...

நன்றி சதீஷ் குமார். ராஜேஷ் .

நன்றி சதீஷ் குமார். ராஜேஷ் .


ராஜேஷ் - அவர் கருத்தை அவர் சொல்லி இருக்கார். நீங்க உங்க கருத்தை சொல்லுங்க. எதற்கு தனிமனித தாக்குதல். அதிலும் இவர் தான் நல்ல நேரம் சதிஷ்குமார என்று எனக்கு சந்தேகம்.. அவர் என் அனானியாக கருத்து போட வேண்டும் .. அவராக இருக்க மாட்டார் .

Anonymous said...

நண்பரே மேலே இருக்கும் கமெண்ட் என்னுடையது அல்ல..ராஜேஷ் தி.மு.க அல்லக்கை..அவன் செய்த வேலைதான் இது அரசியல் பதிவு எழுதினாலும் கமெண்ட் மாடரேசன் போட்டுக்கொள்ளவும்!!

Post a Comment