அம்மா தன் அதிரடியை ஆரம்பித்து விட்டார்..
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க ௧௬ எம் எல் ஈக்கள் வேண்டும் என்ற நிலையில், சுயேட்சை வேட்பாளர் வி.எம்.சிவக்குமார் ஆதரவு அளித்ததால் தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.
இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனித்து ஆட்சியமைத்து கூட்டணிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் ஜெயலலிதா கண்டனம் தெரிவத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் அதிமுக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் போட்டியிட்டது. இதில் 15 தெட்குதிகளில் என்ஆர் காங்கிரசும், 5 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆட்சியில் தங்களை சேர்க்காமல், என்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே ஆட்சி அமைத்து, தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. தான் தமிழக முதல்வராக பதவியேற்றதற்கு அவர் இதுவரை வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்றும், புதுவையில், அதிமுக ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த கையேடு கூட்டணி கட்சிகளை கழட்டி விடுவது அம்மாக்கு புதிதில்லை என்பது அனைவரும் அறிந்தது.. அடுத்த தேமுதிகவா என்பதே இப்போதைய கேள்வி ..
முதலில் சட்டசபை மாற்றம், இப்போ கூட்டணி கட்சி கழட்டிவிடப்படுதல் .. அம்மா மாறிவிட்டார் என்று முழுமனதுடன் சொல்லமுடியவில்லை.
அம்மா மாறுவாரா ??? உங்கள் கருத்து என்ன ?
10 comments:
This is called mummy returns
Kondaiyai konjam maraiyungal.
வருகைக்கு நன்றி ஹேமமாலினி, ஸ்ரீதர் ..
ஸ்ரீதர் - யார் கொண்டையை மறைக்கணும்??
போகப் போகப் புரியும்-நாளைப்
பொழுது விடிஞ்சாத் தெரியும
ஆகப் போவது என்ன-இது
அரசியல் சகஜம் இன்ன
புலவர் சா இராமாநுசம்
வருகைக்கு நன்றி புலவர் சா இராமாநுசம்
நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...
வந்துப்பாருங்கள்..
புதுசு புதுசா சொல்றாங்கயா..
http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_20.html
Good analysis. .
தென்றல் தேடி வந்த பூங்காவில் புயலுக்கு அறிகுறி சொல்றீங்க ... அப்ப அடுத்து தே.மு.தி .க அடுத்து மக்கள்
அன்பின் வேலவன் - ஜெயலலிதா கூட்டணியில் உள்ள என் ஆர் காங்கிரஸ் தனிப் பெரும்பானமி பெறாத நிலையில் ஆட்சி அமைக்க அதிமுகவின் உதவியினைத்தானே நாடி இருக்க வேண்டும். ரங்கசாமி சுயேட்சை எம் எல் ஆயின் உதவியுடன் ஆட்சி அமைத்தது சரியா ? அது கூட்டணிக் கட்சிக்குச் செய்த துரோகம் இல்லையா ?
வருகைக்கு நன்றி சௌந்தர், ராஜா, ரியாஸ் , சீனா ...
சீனா - அரசியலில் குதிரை பேரமெல்லாம் சகஜம்தானே .. அதுவும் அம்மா இதுபற்றி துரோகம் என்று சொல்லுவது என்ன வகை.. கூடவே இருந்த வைக்கோவிற்கு அம்மா செய்தது?
Post a Comment