Tuesday, May 24, 2011

பதிவர் கிசு கிசு .. சுட சுட !



சூடான பதிவர் கிசிகிசு பத்து



கைரேகை, ஜாதக கட்டு ஸ்பெஷல் "சித்தூ" பதிவர் இப்போதெல்லாம் போயஸ் தோட்டத்து வாசலில் தினமும் ஆஜராகிறாராம் .. அம்மாவிற்கு நிச்சய வெற்றி என்று பலாபலன் பார்த்து தேர்தல் முடிவுக்கு முன்னரே பதிவு செய்த "முன்தேதியிட்ட" பதிவின் காப்பியை கையில் வைத்துக்கொண்டு அம்மாவின் கண்பார்வைக்காக காத்து நிற்கிறாராம்.. நல்லது நடக்கட்டும்.

தமிழுக்கு உண்மையாய் இருக்கும் பதிவருக்கும் , நல்ல நேரம் பார்த்து பதிவு எழுத ஆரம்பித்த பதிவருக்கும் கடும் போட்டி.. செய்திகளை சுட சுட தருவது யார் என்பதில்.. வாரம் இருமுறை தவறாது ஒரு பிரபல புலனாய்வு பத்திரிகை அலுவலகத்தில் நடுநிசியில் கழுகு போல் காத்திருந்து தேவையான செய்திகளை கொத்தி வந்து முதலில் பதிவது யார் என்பதில் தான் போட்டியே.. உண்மையானவர் இதில் முந்துகிறார்.. பிரிண்டிங் மிசின் ஓடும் போதே, அடியில் குனிந்து லென்ஸ் பார்வையால் செய்திகளை கவ்வி விடுகிறாராம்.. பத்திரிக்கை, கடைக்கு வருவதற்கு முன்பே இவர் பதிவில் செய்திகள் சுட சுட வந்துவிடுமோ என்று பத்திரிக்கை அலுவலகம் பரபரத்துக்கிடக்கிறது

அதிர்ஷ்ட பார்வை பதிவர் ஏக கடுப்பில் இருக்கிறார்.. மே 13 க்கு பிறகு எந்த பதிவு போட்டாலும் கூடி குமியடிக்க அனானிகள் குவிந்து விடுவதால் பதிவுகள் போடமுடியாமல் திணறுகிறார்.. பல முன்னணி பதிவர்களே அனானிகளாக கும்மியடிப்பதில் ஏகத்துக்கும் கிர்ர்ரடித்து கிடக்கிறார் .. சில நாட்களுக்கு அரசியல் சாயல் இல்லாமல் குலுக்குவார்பட்டி , மஸ்கூட்டா போன்ற பதிவுகளை மீள்பதிவு செய்யாலாமா என்று ஆழ்ந்த சிந்தனையில் உள்ளார்.

விருச்சிக ராசியில் பிறந்த காந்த பதிவர் பதிவை தற்காலிகமாக மூடிவிட்டு ஒதுங்கி இருக்கலாமா என்று தீவிர சிந்தனையில் இருக்கிறார்.. தொட்டது துலங்காது போனது மட்டுமில்லாது, "கோ" வான "கிருஷ்ண" பதிவரும் , "R K நகர் பதிவரும் கண்டுபிடிச்சேன் , கண்டுபிடிச்சேன் நீ யாருன்னு நானும் கண்டுபிடிச்சேன் நு கோரஸாக பாடியதாலும், பல பஸ்சுகள் மாறி மாறி வந்து இடிப்பதாலும் இந்த முடிவாம் .. அநேககமாக அடுத்த தேர்தல் வரை மூடு விழா இருக்கும் என தெரிகிறது.

குதிரையில் வரும் பதிவர் எடுத்து வரும் சண்ட்விச்ல், நான் வெஜ் மட்டுமில்லாது வெஜ் சாண்ட்விச்சில் கூட இப்போதெல்லாம் நான் வெஜ் நெடி கலந்து மிக காரமாக இருப்பதால், அவரது பதிவுக்கு தடா போடலாமா என்று பிரபல பெண் பதிவர்கள் அனைவரும் கூடி கூடி பேசி வருகிறார்கள். மருத்துவ குணம் உள்ள செடி பதிவர் மற்றும் சமையல் குறிப்பு பதிவர் தான் இந்த கூட்டங்களுக்கு தலைமையாம்.

பறவைகள் சரணாலய பதிவர் சமீப காலமாக தன் பதிவுக்கு எக்கச்சக்கமாய் விழும் வாக்குகளை பார்த்து அசந்து போய் விட்டாராம்.. சரணாலயத்துக்கு போகும் வழியில் இருக்கும் பிரபல அம்மன் கோவில் தான் இதற்கு காரணம் என்று, ஏதாவது நேர்த்திக்கடன் செய்ய விரைவில் கோவிலுக்கு விசிட் அடிக்கும் மூடில் இருக்கிறாராம். துனைக்கு வரும்படி poem street பதிவரை அழைக்க , அவரோ, எனக்கும் அந்த மாதிரி ஓட்டு விழட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று இழுத்தடிக்கிறாராம் .

அரிசி மாவு , உளுந்து மாவு பலகார பதிவு கை மாறியதில் இருந்து பதிவுகள் கார சட்னியிலிருந்து தேங்காய் சட்னிக்கு மாறியது போல் சப்பென்றாகிவிட்டது.. இதில் அப்செட் ஆன வாடிக்கையாளர்கள் எங்கே மஞ்சள் கமென்ட் பச்சை கமெண்ட்டாக மாறிவிடுமோ என்றும் கலக்கத்தில் உள்ளதால் , வியாபாரம் படுத்துவிட்டது . மீண்டும் கைமாற்றிவிடலாமா என்ற சிந்தனை வரத்துவங்கியுள்ளதாம் இந்நாள் ஓனருக்கு.

கருப்பு சிவப்பு கட்சிக்கு சனிபெயர்ச்சி தொடங்கி இருப்பதை அடுத்து மணியான பதிவர், புதுக்கோட்டை மழை சாரல் பதிவர், ஜெய்ச்சவனுக்கு எதிர்பதமான "மணிவண்ணன்" ஸ்டைல் பதிவர், சொல்லில் குற்றம் கண்டுபிடிக்கும் ராமனின் எதிரி பதிவர், நாலாம் வகுப்பு பாஸ் பண்ண பதிவர், தினமணி பதிவர், freedom பதிவர், கடற்கரை மணலில் வேகமாக ஓடுவதை நோண்டும் பதிவர், அனுபவிச்சு ஜோசியம் பார்க்கும் பதிவர் உள்ளிட்ட பல பதிவர்கள் கலந்துக்கொள்ளும் மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு நடக்கிறதாம் .. இதற்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று ட்ரிப்பில் செவென் பதிவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறாராம் , கொசுறு செய்தி - 1 . இந்த விழாவில் "1966 - சமீபத்திய " முதிய பதிவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது.. சமீபத்திய மனதை நிறைவடைய செய்த விஷயங்கள் அனைத்துக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயரே துணை என்று மகிழ்ந்து போய் இருக்கிறார் அந்த பதிவர்.
கொசுறு செய்தி 2 . உண்மையான தமிழுக்கு சொந்தக்கார பதிவர் ஒதுங்கியுள்ளராம்.. கலந்துக்கொள்ள மனம் நிறைய ஆசை தளும்பி வழிந்தாலும் , ஏற்கனவே பதிவர் சந்திப்பின் அனுபவங்கள் அவரை ஒதுங்கி இருக்க செய்கிறதாம்..



கொசுறு செய்தி 3 . மேலும் பல பதிவர்கள் இந்த விழாவில் கலந்துக்கொள்ள விரும்பி வீட்டில் இப்போதே பெரிய சைஸ் துண்டு , மற்றும் ஹெல்மெட் வாங்கி வைத்து இருக்கிறார்களாம்




மழைக்கடவுள் பதிவருக்கும் , கிங் பாண்ட் (KING POND) ல் இருந்து வந்து அனைவரையும் கலாஸும் பதிவருக்கும் யார் அதிக ஹிட் வாங்குவது என்பதில் கடும் போட்டியாம்.. இந்த நிமிட் வரை கிங் பாண்ட் சற்று முன்னிலையில் இருப்பதாக கேள்வி . போட்டியில் சற்று உணர்ச்சி வசப்பட்டு விடுவதால் இருவரின் சில சமிபத்திய பதிவுகளில் அதிக மைனஸ் ஓட்டு விழுவது வாடிக்கையாடிவிட்டது.. இருந்தும் மைனஸ் ஓட்டில் கூட பிரபலம் ஆகும் வாய்ப்பு இருப்பதால் அதையும் மகிழ்ச்சியாகவே இருவரும் ஏற்பதாக தெரிகிறது

அறுபடை வீட்டு கடவுளின் ஆயுதத்தை பெயரில் கொண்ட பதிவருக்கு பிரபல சினிமா கூத்தாடும் பத்திரிகையில் கிசு கிசு எழுதும் பகுதியில் வேலைகிடைக்கும் வாய்ப்பிருப்பதால் , அச்சாரமாக வலைப்பதிவர்கள் பற்றி இட்டுகட்டி கிசு கிசு எழுதி பயிற்சி பெரும் யோசைனையில் இருக்கிறார்.. இந்த பதிவை நீங்கள் படிக்கும் வேளையில் கூட அவர் பதிவு பப்ளிஷ் செய்யப்பட்டு , பலர் அவருக்கு டின் கட்டியிருக்கலாம் என்று தமிழ்மண பட்சி படபடக்கிறது ..

டிஸ்கி , முஸ்கி , பஸ்கி- யார் மனைத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல இது என்பதை படிக்கும் அனைவரும் புரிந்துக்கொள்வீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்..

மேலும் பல பதிவர் கிசு கிசு விரைவில்..

அன்புடன்
வேலவன்

16 comments:

varadharajan said...

அனைத்து கிசு கிசுக்களும் பிரமாதம்.. ! ஆமா அது யாரு ட்ரிப்ள் செவென் ??

Mugundhan said...

excellent ! very funny.. u r slected for the kisu kisu writer role..

வாக்காளன் said...

இரண்டாவது கிசு கிசு படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.. அனைத்தும் அருமை

ராஜேஷ், திருச்சி said...

கிசுகிசுக்கள் கலக்கல்.. ! ரூம் போட்டு யோசிபிங்களோ

வேலவன் said...

வருகைக்கு நன்றி வரதராஜன், முகுந்தன், வாக்காளன், திருச்சி ராஜேஷ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லா கிசுகிசுவும் நல்லா இருந்திச்சி...

கிசுகிசுவில் முண்ணனி பதிவர் ஒருத்தரைக்கூட விட்டது மாதிரி தெரியல...

திட்டி ரெண்டு போடலாம்ன்னு வந்தா டிஸ்கி போட்டு தப்பிச்சிட்டே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வேலா நடத்துங்கள்...
தங்கள் திருவிளையாடலை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னைப்பத்தி கிண்டல் பண்னியிருக்க அப்ப இந்த பதிவு ஹிட் ஆகனும்...

தமிழ்மணத்தில் 7-வது ஓட்டு போட்டு அதை செய்து விட்டேன்..

வேலவன் said...

மிக்க நன்றி POEM STREET
//கிசுகிசுவில் முண்ணனி பதிவர் ஒருத்தரைக்கூட விட்டது மாதிரி தெரியல...//
சில பேரு விட்டுபோச்சு.. அதான் பார்ட் 2 வரும்

//தமிழ்மணத்தில் 7-வது ஓட்டு போட்டு அதை செய்து விட்டேன்.//
நன்றி நன்றி , வந்தாச்சு வாசகர் பரிந்துரைல ..

rajamelaiyur said...

கலக்குறிங்க போங்க

Unknown said...

நன்றி!

வேலவன் said...

வாங்க ராஜா , விக்கி, நன்றி.. !

பார்ட் - II ப்ளான்ல இருக்கவங்க எல்லாம் வரிசை கட்டி வரீங்களே :)

ranganathan said...

//சமையல் குறிப்பு பதிவர் ///

அனைத்தும் அருமை.. ! இண்டரெஸ்டிங் .. ! சமையல் குறிப்பு நிறைய per இருக்காங்க , அதுல குறிப்பா யாரு???

வலைஞன் said...

ஜாதக கட்டு ஸ்பெஷல் "சித்தூ" பதிவர் - சித்தூர் முருகேசன்
தமிழுக்கு உண்மையாய் உண்மை தமிழன் அண்ணாச்சி
நல்ல நேரம் பார்த்து பதிவு எழுத ஆரம்பித்த பதிவருக்கும் சதீஷ் குமார் ஆர் கே
அதிர்ஷ்ட பார்வை பதிவர் . லக்கி லுக்
விருச்சிக ராசியில் பிறந்த காந்த பதிவர் , விருசிககாந்த்
"கோ" வான "கிருஷ்ண" பதிவரும் - கோவி கண்ணன் ,
"R K நகர் பதிவரும் - சதிச்ஷ் குமார்
குதிரையில் வரும் பதிவர் - ஜாக்கி சேகர்
மருத்துவ குணம் உள்ள செடி பதிவர் - துளசியக்கா
சமையல் குறிப்பு பதிவர் - ????
பறவைகள் சரணாலய பதிவர் - வேடந்தாங்கள் கருண்
poem street - கவிதை வீதி சௌந்தர்
அரிசி மாவு , உளுந்து மாவு பலகார பதிவு ௦ இட்லி வடை
மணியான பதிவர் - மணிஜி - மணிப்லாக்
புதுக்கோட்டை மழை சாரல் பதிவர் - புதுகை சாரல்
ஜெய்ச்சவனுக்கு எதிர்பதமான "மணிவண்ணன்" ஸ்டைல் பதிவர் - தோத்தவன்டா
சொல்லில் குற்றம் கண்டுபிடிக்கும் ராமனின் எதிரி பதிவர் - ராவணன்
நாலாம் வகுப்பு பாஸ் பண்ண பதிவர், - ஐந்தாம் வகுப்பு
தினமணி பதிவர், - ????
freedom பதிவர் - விடுதலை
கடற்கரை மணலில் வேகமாக ஓடுவதை நோண்டும் பதிவர், நண்டு @ நோரண்டு
அனுபவிச்சு ஜோசியம் பார்க்கும் பதிவர் - முருகேசன்
ட்ரிப்பில் செவென் - சதீஷ் ஆர் கே
"1966 - சமீபத்திய " முதிய பதிவருக்கு - டோண்டு ராகவ்
மழைக்கடவுள் பதிவருக்கும் , - வருண்
கிங் பாண்ட் (KING POND) - ரஹீம் கஸாலி
அறுபடை வீட்டு கடவுளின் ஆயுதத்தை - வேலவன்

வேலவன் said...

நன்றி வலைஞன் , ரங்கநாதன் ..

இது கிசிகிசு ரங்கநாதன்.. குறிப்பா நான் யாரையும் சொல்ல முடியாது :)
வலைஞன் - நோ கமெண்ட்ஸ் .. ! :) நான் எதுவும் சொல்லலை

Anonymous said...

Interesting to Read.. Got the same feeling like how it is said in magazines

Post a Comment