
இன்றைய அம்மா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருப்பவர் ஆர்.பி.உதயகுமார்,அமைச்சராக பதவி ஏற்ற நாளில் இருந்து இவர் சட்டசபை, கட்சி அலுவலகம், தலைமைச் செயலகத்துக்கு செல்லும்போது காலில் செருப்பு அணியாமல் செல்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இது ஏன் என்று கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
அம்மாவே (ஜெயலலிதா) என் தெய்வம். அவர் இருக்கும் இடம் கோவில். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. அதுபோல எனக்கு தெய்வமாக விளங்கும் அம்மா கட்சி அலுவலகத்துக்கு வருவதாலும், சட்டசபைக்கு வருவதாலும், தலைமைச் செயலகத்துக்கு வருவதாலும் அந்த இடம் எனக்கு கோவிலாக தெரிகிறது. அதனால் இந்த 3 இடத்துக்கும் செருப்பு போடாமல் எனது பணியை தொடருகிறேன். வாழ்நாள் முழுவதும் இதனை தொடர்ந்து கடைபிடிப்பேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.
உதயகுமார் மாதிரி நாமும் அம்மாவை தரிசிக்கும்போது செருப்பு இல்லாமல்தான் இருக்க வேண்டுமா என, மற்ற அமைச்சர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்கின்றனர்.
தகவல் தொழில் நுட்பத்துறைக்கு இப்படி ஒரு அமைச்சர்.. விளங்கிடும் அந்த துறை..
வேலவன் கமெண்ட் - எல்லா எம்எல்ஏவும் இப்படியே மாறிட்டா . சட்டசபை வாசல்ல செருப்புக்கு டோக்கன் போடுற காண்ட்ராக்ட் எடுத்தா செம கலக்ஷன் பார்க்கலாம் போல இருக்கே !!!!
Thanks - Nakkhheeran.com
6 comments:
என்ன ஒரு சபதம்....
அமைச்சர் உதயகுமார் வாழ்க...
அம்மாக்கு மணியடிச்சு கற்பூரம் காமிச்சி , அபிஷேகம் பண்ணாம இருந்தா சரி
நல்லவேளை அந்த மூனு எடத்திலையும் அங்கப்பிரதட்சனை மாதிரி உருண்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்காம நடந்து போராறே அதுக்காக சந்தோசப்படுங்க.
////வேலவன் கமெண்ட் - எல்லா எம்எல்ஏவும் இப்படியே மாறிட்டா . சட்டசபை வாசல்ல செருப்புக்கு டோக்கன் போடுற காண்ட்ராக்ட் எடுத்தா செம கலக்ஷன் பார்க்கலாம் போல இருக்கே !!!!/////
செருப்பு காண்ட்ராக்ட் ஊழல்ன்னு அடுத்த ஆட்சியை மாற்றத்தில் கம்பி என்னன்னும் பரவாயில்லையா ?
அடி மட்ட தொண்டனாக இருந்த ஒருவரை அம்மா அமைச்சராக உயர்த்தி உள்ளார் .. அதற்கு அவர் விசுவாசமாக இருக்கிறார்.. உங்களுக்கு என்ன எரிகிறது . கட்சி தலைமைக்கு விசுவாசம் ஒன்ன்றும் தவறில்லை
வருகைக்கு நன்றி சௌந்தர், ராஜேஷ் , முருகன், ரியாஸ் , பாபு
//அமைச்சர் உதயகுமார் வாழ்க... /
வாழ்க வாழ்க
//அம்மாக்கு மணியடிச்சு கற்பூரம் காமிச்சி , அபிஷேகம் பண்ணாம இருந்தா சரி //
நடந்தாலும் நடக்கலாம்
//அடம் பிடிக்காம நடந்து போராறே அதுக்காக சந்தோசப்படுங்க. //
அயோ முருகன்.. இதுவேற நடக்கனுமா???
ஏங்க ரியாஸ் இப்படி பயமுறுத்துறீங்க
பாபு - இதெல்லாம் கட்சிகாரர்ராக போயசில், கட்சி ஆபிசில் வைத்துக்கொண்டால் பரவாயில்லை. யாரும் கேட்க மாட்டங்க.. சட்டசபையில் ஏன்?
Post a Comment